2026 மலேசியாவுக்கு வருகை தரும் ஆண்டு பிரச்சாரத்தை பிரதமர் தொடக்கி வைக்கிறார்

கோலாலம்பூர்,

2026 மலேசியாவுக்கு வருகை தரும் ஆண்டை தேசிய அளவில் அறிமுகப்படுத்தும் வகையில் I Lite U நிகழ்ச்சி வரும் ஜனவரி 3ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங் பெவிலியனில் நடைபெறவுள்ளது.


மடானி மலேசியா கொள்கையை பறைசாற்றும் வகையில் தேசிய அளவில் நடைபெறவுள்ள இந்நிகழ்வை வீடமைப்பு, ஊராட்சி துறை அமைச்சு, சுற்றுலா,கலை, பண்பாட்டு துறை அமைச்சு, பிரதமர் துறையின் கூட்டரசுப் பிரதேச துறை, கோலாலம்பூர் மாநகர் மன்றம் உட்பட பல அமைப்புகளின் கூட்டு சேர்ந்துள்ளன.

இந்த பிரச்சாரத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கவுள்ளதாக குறிப்பிட்ட வீடமைப்பு, ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங், தேசிய சுற்றுலா பிரச்சாரத்தை ஆதரிக்கும் வகையில் ஆஸ்கார் விருது வென்ற நடிகை டான்ஸ்ரீ மிச்செல் இயோ பங்கு கொள்கிறார்.


பன்முகத்தன்மையையும்புக்கிட் பிந்தாங் மலேசியாவின் வசீகரத்தையும் வெளிப்படுத்துவதில் பிரகாசிக்கிறது.2026 மலேசியாவுக்கு வருகை புரியும் ஆண்டு பிரச்சாரத்தின் ஓர் அங்கமான இந்த நிகழ்வு அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி அலைவரிசைகளில் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று அவர் சொன்னார்.


20 படைப்பிரிவுகளின் அணிவகுப்போடு பல்வேறு உள்ளூர் கலைஞர்களின் நேரடி படைப்புகள் இடம்பெறுவதால் புக்கிட் பிந்தாங்கில் உள்ள பல முக்கிய சாலைகள் தற்காலிகமாக மூடப்படும். இந்த நிகழ்வு உள்ளூர், அனைத்துலக பார்வையாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ஙா கோர் மிங் குறிப்பிட்டார்.


மேலும் இந்த நிகழ்வில் பங்கேற்கும் மலேசியர்கள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பொது போக்குவரத்து வசதியை தவிர்க்குமாறு அவர் வலியுறுத்தினார்.
மலேசியாவின் சுற்றுலா ஆண்டை வரவேற்க தயாராகும் நாம், நமது நகரை தூய்மையுடன் பராமரித்துக் கொள்வதில் ஒவ்வொரு மலேசியரும் கூடுதல் கவனமுடன் செயல்பட வேண்டும். அனைத்து பார்வையாளர்களும் அங்கிருந்து கலையும்போது மலேசியா நம் வீடு எனும் அழகிய நினைவுகளுடன் செல்ல வேண்டும்.

2026 ஜனவரி 1 முதல் பொது இடங்களில் குப்பைகளை வீசுவோருக்கு எதிரான சமூக துப்புரவுச் சேவை தண்டனை அமலுக்கு வருகிறது.


புதிய சட்டவிதிமுறைகளை தவறிழைக்கும் தரப்புக்கு அபராதத்துடன் கூடிய கட்டாய சமூக துப்புரவுச் சேவை விதிக்கப்படும். ஆதலால் இந்நிகழ்வில் பங்குபெறும் பங்கேற்பாளர்கள் தூய்மையை பேணுவதோடு மலேசியாவின் சுற்றுலாத் துறைக்கு நண்பர்களாக ஒத்துழைக்குமாறு ஙா கோர் மிங் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here