இந்தியாவின் குடியரசு தின விழாவை சிறப்பித்து டூடுல் வெளியிட்ட கூகுள்

இந்தியா, ஜனவரி 26 :

இந்தியாவின் 73-வது குடியரசு தின விழா, இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை சிறப்பிக்கும் விதமாக, கூகுள் இணைய தளம் தனது முகப்பில், இசைக்கருவிகள் வடிவில் டூடுல் வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு சிறப்பான நாளையும், அதன் முக்கியத்துவத்தையும் கொண்டாடும் வகையில் கூகுள் இணைய பக்கத்தில், சிறப்புப்பான சித்திரங்களை வடிவமைப்பதை அந்த நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளின் நடைபெறும் சிறப்பம்சங்களில் ஒன்று குடியரசு தின அணிவகுப்பு உட்பட டூடுல் கலைப்படைப்பு அதன் வெவ்வேறு கூறுகளை எடுத்துக்காட்டுகிறது.

அதில் இடமிருந்து வலமாக, டூடுல் அணிவகுப்பு விலங்குகளை சித்தரிக்கிறது: யானை, குதிரை, நாய், ஒட்டகம்; ஒரு சிவப்பு தபேலா; அணிவகுப்பு பாதை; ஒரு சாக்ஸபோன்; புறாக்கள்; மற்றும் தேசியக் கொடியின் மூவர்ணங்கள் ஆகியவற்றை அது காட்டுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here