மின்கம்பத்தில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்

தாவாவ், ஜனவரி 30 :

தாமான் ஈஸ்டர்ன் அருகேயுள்ள ஜாலான் பூங்கா ராயாவில், இன்று காலை 10.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், 41 வயதான பாதிக்கப்பட்ட ஆடவர் தனியாக பராமரிப்புப் பணிகளைச் செய்து கொண்டிருந்த போது, அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார் என்று நம்பப்படுகிறது.

தாவாவ் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) தலைவர் ஜூலியஸ் ஜான் ஸ்டீபன் ஜூனியர் இதுபற்றிக் கூறுகையில், சம்பவ இடத்திற்கு விரைந்து செல்வதற்கு முன்பு காலை 10.32 மணியளவில் தனது துறைக்கு இந்த சம்பவம் குறித்து அவசர அழைப்பு வந்தது என்றார்.

தகவலின்படி, அவர்கள் அந்த இடத்திற்கு வந்து பார்த்தபோது, ​​மின்சாரம் தாக்கியதாக நம்பப்படும் ஆண் ஒருவர், மின்கம்பத்தில் தொங்கிய நிலையில் உயிரிழந்திருந்தார்.

“SESB ஆல் மின்சாரம் துண்டிக்கப்பட்ட பிறகு நாங்கள் பாதிக்கப்பட்டவரை படிக்கட்டுகளைப் பயன்படுத்தி கீழே இறக்கினோம்,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அவரது உடல் மேலதிக நடவடிக்கைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்னர், பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவ அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டதாக ஜூலியஸ் கூறினார்.

மேலும் இந்த மீட்பு நடவடிக்கை காலை 10.35 மணியளவில் முடிந்தது என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here