நாங்கள் சட்டவிரோத சூதாட்டத்தை தடுக்க போராடுகிறோம்; ஆனால் சில அதிகாரிகளின் பங்கு இருப்பதை மறுக்க முடியாது – ஐஜிபி

கோலாலம்பூர்: கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றி மீண்டும் சட்டவிரோதமான சூதாட்டக் கூடங்கள் உருவாகத் தொடங்கியதை அடுத்து, சூதாட்ட கும்பலுடன் போலீஸ் அதிகாரிகள் கூட்டுச் சேர்ந்து இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி மறுக்கவில்லை.

அவரது பெயரையும் புக்கிட் அமானையும் பயன்படுத்தி சூதாட்டக் கூடங்களைச் செயல்படுத்த சில தரப்பினரும் உள்ளனர். ஆனால் உண்மையில் புக்கிட் அமான் அத்தகைய கும்பலுக்கு எதிராக போரில் ஈடுபட்டதாக ஐஜிபி கூறினார்.

“சூதாட்ட கும்பல்கள் செயல்படுவதற்கு ‘அனுமதி’ வழங்க எனது பெயர் பயன்படுத்தப்படுவதாக இரண்டு வாரங்களுக்கு முன்பு எனக்குத் தகவல் கிடைத்தது. அனைத்து காலக் கட்டங்களிலும் சட்டவிரோத சூதாட்டத்துடன் போரிட்டு வருகிறோம். சில காவல்துறை அதிகாரிகள் இதுபோன்ற  கும்பல்களுடன் தொடர்புபட்டிருக்க ஒரு சிறிய வாய்ப்பு உள்ளது என்பதை நான் மறுக்கவில்லை என்று பெரித்தா ஹரியான் அறிக்கை கூறியது.

கடந்த வாரம் கிள்ளான் பள்ளத்தாக்கு முழுவதும் பல ஆன்லைன் சூதாட்ட சேவைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், பல போலீஸ் அதிகாரிகள் மற்றும் பிற அமலாக்க முகமைப் பணியாளர்கள் கும்பல்களுடன் தொடர்புபட்டுள்ளதாகவும் தினசரி செய்தி வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here