கோத்தா கெமுனிங்கில் உள்ள தேவாலயத்தில் தீ விபத்து!

ஷா ஆலாம், பிப்ரவரி 3 :

நேற்று இரவு, ஷா ஆலாமின் கோத்தா கெமுனிங்கில் உள்ள தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், அவ்வளாகம் தீயினால் எரிந்து நாசமானது.

சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் நோரஸாம் காமிஸ் கூறுகையில், இரவு 11.19 மணியளவில் இச்சம்பவம் குறித்து தமது துறைக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு நான்கு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 25 பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

கோத்தா கெமுனிங் தேவாலயம் (Kota Kemuning Assemblies of God Church) அமைந்திருந்த இரட்டை மாடி கடையின் இரண்டாவது மாடியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

“தேவாலயமாகப் பயன்படுத்தப்படும் கட்டிடத்தின் மேல் தளத்தை மட்டுமே தீ விபத்து பாதித்தது என்று அங்குள்ள பொறுப்பதிகாரிகள் தெரிவித்தனர்” என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

இரவு 11.50 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த சம்பவத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here