சூதாட்டத்திற்கு எதிரான (Ops Limau) நடவடிக்கையில் கெடா குற்றப் புலனாய்வுத் துறை ட்ரோன்களைப் பயன்படுத்துகிறது

அலோர் ஸ்டார், பிப்ரவரி 5:

கெடா குற்றப் புலனாய்வுத் துறை (JSJ) சீனப் புத்தாண்டுடன் இணைந்து, மாநிலத்தில் சூதாட்ட நடவடிக்கைகளைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட Ops Limau நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது என்று கெடா குற்றப் புலனாய்வுத் துறை தலைவர் டத்தோ G. சுரேஷ் குமார் கூறினார்.

இந்த நடவடிக்கை ஜனவரி 25ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சூதாட்ட நடவடிக்கைகளைத் தடுக்க அவரது துறையினர் ஆளில்லா விமானங்களையும் பொதுமக்களின் தகவல்களையும் பயன்படுத்தினர் என்றார்.

நேற்றிரவு கோத்தா ஸ்டாரில் நடந்த சூதாட்டம் மற்றும் கோலா மூடாவில் போ போர் மஞ்ஜோங் சூதாட்டம் ஆகியவற்றை தமது துறையினர் வெற்றிகரமாக முறியடித்தனர் என்றார்.

கோத்தா ஸ்டாரில் நேற்று இரவு 8.30 மணியளவில் ஜாலான் பெகாவாயில் உள்ள புதருக்குள் சூதாட்டத்தில் ஈடுபட்ட 50 முதல் 70 வயதுக்குட்பட்ட 15 பேரை கெடா கன்டிஜென்ட் போலீஸ் தலைமையகத்தின் (IPK) JSJ குழுவினர் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து கைது செய்தனர்.

மேலும் சூதாட்ட நடவடிக்கைக்கு பயன்படுத்திய RM14,000 ரொக்கப் பணம் மற்றும் உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

கோல மூடாவில் நடந்த சோதனையில், சுங்கை பட்டாணியின் லகுனா மெர்போக் டவுனில் உள்ள இரண்டு மாடி வீட்டில் அவரது துறையினர் சோதனை நடத்தியதில், சூதாட்ட அமைப்பாளர் உட்பட 10 பேரை நள்ளிரவு 12.15 மணியளவில் கைது செய்ததாக சுரேஷ் குமார் கூறினார்.

இந்த நடவடிக்கையில் கோல மூடா மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் (IPD) குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களின் குழுவும் இணைந்துள்ளதாக அவர் கூறினார்.

“50 முதல் 60 வயதுடைய அவர்கள் அனைவரும் திறந்த சூதாட்ட வீடு சட்டம் (ARJT) 1953 இன் பிரிவு 6 (1) இன் கீழ் தடுத்து வைக்கப்பட்டனர்.

“அதுமட்டுமல்லாமல், அவர்கள் தனிநபர் இடைவெளி மற்றும் முகமூடி அணியாதது போன்ற நிலையான இயக்க நடைமுறைகளை (SOP) மீறியதற்காக, தொற்று நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு விதிமுறைகளின் (PPPDPPB) 2021 ஆம் கட்டம் 4 (Pemulihan) ஒழுங்குமுறை 16 (தேசிய மறுவாழ்வுத் திட்டம் (PPN) இன் படி தடுத்து வைக்கப்பட்டனர். ”என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here