கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 960 பேர் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்

கோத்தா பாரு:

கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதற்கமைவாக அங்குள்ள இரண்டு மாவட்டங்களான கோலக்கிராய் மற்றும் தானா மேராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று மாலை 641 பேரில் இருந்த நிலையில், நேற்றிரவு 960 பேராக அதிகரித்துள்ளது.

259 குடும்பங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட அனைவரும் அங்குள்ள 16 தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று, சமூக நலத் துறையின் (JKM) பேரிடர் தகவல் போர்ட்டல் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here