ஜோகூர் தேர்தலில் புதிய வாக்காளர்கள் அனைவருக்கும் ஒரு ‘முக்கிய சவால்’ என்கிறார் தோக் மாட்

கோலாலம்பூர்: வரவிருக்கும் ஜோகூர் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் சுமார் 750,000 வாக்காளர்களை சேர்ப்பது என்பது தேசிய முன்னணிக்கு   மட்டுமல்ல அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஒரு முக்கிய சவாலாக இருக்கும் என்று கூட்டணியின் துணைத் தலைவர் முகமட் ஹசன் கூறுகிறார்.

2018 பொதுத் தேர்தலில் வாக்களித்த 1.8 மில்லியன் வாக்காளர்களுக்கு இந்த 750,000 வாக்காளர்கள் பாரிய கூடுதலாக இருப்பதாக டோக் மாட் என்றும் அழைக்கப்படும் முகமட் ஹசான் கூறினார்.

இது ஒரு பெரிய அதிகரிப்பு மற்றும் இந்த புதிய வாக்காளர்களின் அணுகுமுறையை மதிப்பீடு செய்து ஆய்வு செய்வது பிஎன் மட்டுமின்றி அனைத்துக் கட்சிகளுக்கும் முக்கிய சவாலாகும். ஆனால் இந்த சவாலை தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். இந்த 750,000 புதிய வாக்காளர்களில் அனைவரும் 18 முதல் 21 வயதுடையவர்கள் அல்ல.

18 முதல் 21 வயதுடையவர்கள் அதிகம் இல்லை. அவர்கள் 30% (புதிய வாக்காளர்களில்) கூட இல்லை. அவர்களில் பெரும்பாலோர் 21 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், அதாவது இதற்கு முன், அவர்கள் (வாக்களிக்க) அக்கறை காட்டவில்லை. அவர்கள் வாக்களிக்கவோ அல்லது பதிவு செய்யவோ இல்லை. எனவே, வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களில் அவர்களை எப்படி வெல்வது என்பது குறித்து தேசிய முன்னணி ஆய்வு செய்து வருகிறது என்று இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கூறினார்.

மாநிலத் தேர்தலில் நிறுத்தப்படக்கூடிய வேட்பாளர்களின் பட்டியலை அம்னோ பட்டியலிட்டுள்ளதாகக் கூறிய முகமட், மற்ற கூறு கட்சிகளும் அதைச் செய்து முடித்துவிட்டதாக தன்னிடம் கூறப்பட்டது.

அம்னோ துணைத் தலைவர் தேசிய முன்னணியின் உயர்மட்ட உறுப்பினர்களுடன் விரைவில் கூடி இடப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் என்றார். முன்னதாக, அம்னோ பொதுச்செயலாளர் அஹ்மட் மஸ்லான், ஜோகூர் கட்சியின் பல பிரிவுகள் இதற்கு முன்பு மற்ற பிஎன் கூறுகள் போட்டியிட்ட இடங்களில் போட்டியிட விண்ணப்பித்ததாகக் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஜோகூரின் வடக்குப் பகுதியில் 16 மாநிலத் தொகுதிகள் இருப்பதாகக் கூறி, அதிக இடங்களை வெல்ல தேசிய முன்னணி கடுமையாக உழைக்கும் என்று முகமட் கூறினார். இதில் கூட்டணி 12இல் வெற்றி பெற விரும்புகிறது. கடந்த பொதுத் தேர்தலில் இந்த 16 இடங்களில் இரண்டை மட்டுமே தேசிய முன்னணியால் கைப்பற்ற முடிந்தது. எதிர் கட்சிகள் மிகக் குறைந்த பெரும்பான்மையில் வெற்றி பெற்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here