ஜார்ஜ்டவுன், பிப்ரவரி 8 :
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆயிர் ஈத்தாமைச் சுற்றிப் போலீசாரால் நடத்தப்பட்ட மூன்று சோதனைகளில், ஒரு தம்பதியினர் மற்றும் அவர்களது நண்பர் அடங்கிய போதைப்பொருள் கடத்தல் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
வடகிழக்கு மாவட்டக் காவல்துறைத் தலைமையகத்தின் (IPDTL) போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் மூலம், 22 கிலோகிராமிற்கும் அதிகமான கஞ்சா மற்றும் 61.5 கிராம் மெத்தாம்பெட்டமைன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
ஆயிர் ஈத்தாமில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், இரவு 9 மணியளவில் நடத்தப்பட்ட முதல் சோதனையில் 38 வயதுடைய இரு உள்ளூர் நபர்கள் கைது செய்யப்பட்டதாக, வடகிழக்கு மாவட்ட காவல்துறை தலைமை துணை ஆணையர் சோஃபியன் சாண்டோங் தெரிவித்தார்.
சந்தேக நபரின் தகவலின் பேரில், அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் வாகன நிறுத்துமிடத்தில் இருந்த புரோட்டான் வாஜா காரை போலீசார் சோதனை செய்ததில், டஜன் கணக்கான பதப்படுத்தப்பட்ட கஞ்சா கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
“அதைத் தொடர்ந்து, அதே குடியிருப்பில் உள்ள மற்றொரு வீட்டுப் பிரிவில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு சந்தேக நபர்களில் ஒருவரின் மனைவியான 40 வயதுடைய ஒரு பெண்ணைக் கைது செய்தனர்.
வடகிழக்கு மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் (IPD) இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாயா தெருபோங் மற்றும் ஆயிர் ஈத்தாம் ஆகிய இடங்களில் இந்தக்குழு தீவிரமாக கஞ்சா விநியோகத்தில் ஈடுபட்டிருந்தததை விசாரணையில் கண்டறிந்தனர்”.
சோதனையின் போது, 23 கஞ்சா கட்டிகள், இரண்டு கண்ணாடி பாட்டில்கள் மற்றும் கஞ்சா அடங்கிய ஏழு ஒளிஊடுருவக்கூடிய பாக்கெட்டுகள், லைட்டர்கள், டிஜிட்டல் ஸ்கேல்கள் மற்றும் பதப்படுத்தல் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் பல உபகரணங்களை போலீசார் கைப்பற்றினர்.
அதுமட்டுமின்றி, RM151,047 மதிப்புள்ள போதைப்பொருள் உட்பட, இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் அக்குழு பயன்படுத்திய ஒரு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
“சந்தேக நபர்களான இரண்டு ஆண்களின் சிறுநீர் பரிசோதனையில் மெத்தாம்பேட்டமைன் என்ற போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டது, அதே சமயம் விற்பனையாளராக பணிபுரிந்த பெண் போதைப்பொருள் பரிசோதனையில் எதிர்மறையான பதிலைப் பெற்றார்.
“விசாரணையில் உதவுவதற்காக, தம்பதியினரின் சகோதரரை போலீசார் இப்போது தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்,” என்று அவர் கூறினார்.
ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் படி விசாரணையில் உதவ மூன்று சந்தேக நபர்களும் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.