இந்த ஆண்டு ஊதியம் தொடர்பில் முதலாளிகளுக்கு எதிராக மனிதவள அமைச்சகம் 4,661 புகார்களைப் பெற்றுள்ளது

மனிதவள அமைச்சகம் (KSM) பிப். 15 வரை சம்பளம் வழங்காததற்கும் தாமதமாக வழங்குவதற்கும் முதலாளிகளுக்கு எதிராக மொத்தம் 4,661 புகார்களைப் பெற்றுள்ளது. மனிதவள துணை அமைச்சர் டத்தோ அவாங் ஹாஷிம்  வேலை வாய்ப்புச் சட்டம் 1955இன் கீழ் குற்றங்களை உள்ளடக்கிய ‘Working for Workers’ (WfW) டிஜிட்டல் அப்ளிகேஷன் மூலம் புகார்கள் பெறப்பட்டன என்றார்.

நிறுவப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் ஊதியக் குறைப்புகளைச் செய்ததற்காக முதலாளிகளுக்கு எதிராக மொத்தம் 1,394 புகார்களைப் பெற்றுள்ளோம். வெள்ளிக்கிழமை (பிப். 18) பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில் இதுவரை, பல்வேறு புகார்கள் சம்பந்தப்பட்ட மொத்தம் 13,939 வழக்குகள் அமைச்சகம் பெற்றுள்ளது.

இதற்கிடையில், தொழிலாளர்களின் குறைந்தபட்ச வீட்டுவசதி மற்றும் வசதிகள் (திருத்தப்பட்ட) சட்டம் 2019 (சட்டம் 446) இன் கீழ் 171,420 தங்குமிடங்களை உள்ளடக்கிய முதலாளிகளிடம் அமைச்சகம் 40,597 சோதனைகளை நடத்தியதாக அவர் கூறினார்.

சட்டம் 446 இன் கீழ் மொத்தம் 1,192 விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டன. மேலும் 35 வழக்குகள் RM979,000 செலுத்த வேண்டிய அபராதம் உட்பட நாடு முழுவதும் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here