தன் மீதான 11குற்றச்சாட்டுகளையும் மறுத்து விசாரணை கோரினார் சமய போதகர் எபிட் லியூ

மக்களுக்கு நன்கு அறிமுகமான சமய போதகர் எபிட் இர்வான் இப்ராஹிம் லியூ அல்லது எபிட் லூ என்று அழைக்கப்படுபவர், பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக 11 குற்றச்சாட்டுகளின் கீழ் இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
மாஜிஸ்திரேட் நூர் அசிரஃப் சோல்ஹானி முன் வாசிக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் எபிட் இர்வான் 38, மறுத்து விசாரணை கோரினார்.

கடந்த ஆண்டு மார்ச் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் Tenom மாவட்டத்தில் ஒரு நபரின் அடக்கத்தை அவமதிக்கும் நோக்கத்துடன் ஆபாசமான படங்கள் மற்றும் வார்த்தைகளை அனுப்பியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கும் தண்டனைச் சட்டத்தின் 509ஆவது பிரிவின் கீழ் அனைத்து குற்றச்சாட்டுகளும் கொண்டு வரப்பட்டன.

நூர் அசிரஃப் ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் இரண்டு தனிநபர் உத்தரவாதத்துடன் RM1,000 வெள்ளி ஜாமீன் தொகையை நிர்ணயித்ததோடு அடுத்த வழக்கு நாளாக ஏப்ரல் 20 ஆம் தேதியை குறிப்பிடப்பட்டார். சபா ப்ராசிகியூஷன் இயக்குனர் முஹம்மது இல்மாமி அஹ்மத் வழக்கு தொடர்ந்தார். அதே சமய போதகர்  சார்பாக வழக்கறிஞர் முகமது ஜைரி ஜைனல் அபிதீன் ஆஜரானார்.

இதற்கிடையில், புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ அப்துல் ஜலீல் ஹாசன், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி, பாலியல் தொல்லைக் குற்றச்சாட்டின் பேரில் சமயப் போதகர் மீது காவல்துறைக்கு மூன்று புகார்கள் கிடைத்தன.

இந்த வழக்கில் எந்தவிதமான ஊகங்கள் மற்றும் தூண்டுதல்களை ஏற்படுத்த வேண்டாம் என்றும், தகவல் அறிந்தவர்கள் காவல்துறை விசாரணைக்கு உதவ முன்வருமாறும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here