2 மோட்டார் சைக்கிள் விபத்து; கருவில் இருந்து வெளியே விழுந்த குழந்தை – பாசீர் மாஸ் வட்டாரத்தில் சம்பவம்

பாசீர் மாஸ் பகுதியில் நேற்றிரவு கம்போங் லம்பூரில் நிகழ்ந்த  இரண்டு மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்ட விபத்தில் கருவில் இருந்த குழந்தை தனது தாயின் கருவில் இருந்து வெளியே வந்தது. எனினும் விபத்தின் பின்னர் உடனடியாக உயிருடன் இருந்த குழந்தை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளது.

பாசீர் மாஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர், ஏசிபி முகமட் நசருதீன் எம் நசீரின் கூற்றுப்படி, இரவு 7 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் ஒரு தாய், அவரது கருவில் இருந்த குழந்தை வெளியே வந்ததோடு  மற்றொரு குழந்தை படுகாயமடைந்தது. மேலும் 18 வயது இளைஞன் உயிரிழந்தார்.

இறந்தவர்கள் நோர் ஹலிசா அப்துல் உசைப் 25, அவரது குழந்தை மற்றும் முஹம்மது ஷகிம் முகமட் ஜாகி 18 என அடையாளம் காணப்பட்டனர். பலத்த காயமடைந்த நூருல் இமான் மைசரா முகமட் கைரி, (6) தற்போது பாசீர் மாஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

முகமட் நசருதீனின் கூற்றுப்படி, முதற்கட்ட விசாரணையில்  எதிர் பாதையில் மோட்டார் சைக்கிளோட்டி நுழைந்தன் விளைவாக தாய் மற்றும் அவரது குழந்தை ஓட்டிச் வந்த மோட்டார் சைக்கிளில் மோதியது.

இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மோதியதில்  உயிரிழந்த பெண் சாலையின் ஓரத்தில் இருந்த புல்வெளியில் தூக்கி வீசப்பட்டத்தில் 25 வயதான நோர் ஹலிசா சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தாயின் வயிற்றில் இருந்து வெளியே வந்த குழந்தை உயிருடன் இருந்ததால், அவசர சிகிச்சைக்காக பாசீர் மாஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. எனினும் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நூர் இமான் மைசாரா, நோர் ஹலிசாவின் இரண்டாவது குழந்தை இன்னும் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.

சம்பவத்திற்கான காரணம் குறித்து தனது தரப்பினர் இன்னும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 41 (1) இன் படி வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் நோஹ்ட் நசருதீன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here