72 வயதானவர் 9ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி – ஜோகூரில் சம்பவம்

ஜோகூர் பாருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் ஒன்பதாவது மாடியில் இருந்து தவறி விழுந்து மூத்த குடிமகன் ஒருவர் உயிரிழந்தார். திங்கட்கிழமை (பிப்ரவரி 21) அதிகாலை 5.38 மணியளவில் திணைக்களத்திற்கு அவசர அழைப்பு வந்ததாக லார்கின் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைத் தலைவர் முகமட் சுஹைமி ஜமால் தெரிவித்தார்.

ஒரு லைட் ஃபயர் ரேபிட் டிரான்சிட் (LFRT) வாகனம் மற்றும் ஒரு அவசர மருத்துவப் பதில் சேவைகள் (EMRS) வாகனத்துடன் பத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார். இந்த நடவடிக்கைகளுக்கு மூத்த அதிகாரி II முகமட் நசருதீன் அஹ்மத் ஜைனுதீன் தலைமை தாங்கினார் என்று முகமட் சுஹைமி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

72 வயதான நபர் ஒரு காரின் மேல் விழுந்து உயிரிழந்தார் என்று அவர் கூறினார். உயிரிழந்தவரின் உடல் மேலதிக நடவடிக்கைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக முகமட் சுஹைமி தெரிவித்தார். காலை 6.29 மணிக்கு நடவடிக்கைகள் முடிவடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here