கிளாந்தானின் அனைத்து பேரிடர் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளன – மந்திரி பெசார் தகவல்

கோத்தா பாரு, பிப்ரவரி 26 :

கிளாந்தானில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள பேரிடர் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையத்தின் (PKOB) கீழ் உள்ள அனைத்து வெள்ளக் கட்டுப்பாட்டு அறைகளும் செயல்படுத்தப்பட்டு, வெள்ளத்தை எதிர்கொள்ளத் தயார் நிலையில் உள்ளன.

“பாதுகாப்புப் படைகள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உள்ளிட்ட தன்னார்வத் தொண்டர்களின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்போடு, அரசாங்கத்தின் உதவிக்குழு தயாராக உள்ளது.

இக்குழு மக்களை வெளியேற்றும் செயல்முறை மற்றும் அடிப்படை வெள்ள உதவிகள் சீராக நடைபெறுவதை இது உறுதிப்படுத்துகிறது” என்று கிளாந்தான் மந்திரி பெசார் டத்தோ அகமட் யாகோப் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அனைத்து மக்களும் விழிப்புடன் இருக்குமாறும், வெளியேற்றும் வழிமுறைகள் மற்றும் சுய- பாதுகாப்பு எச்சரிக்கையை அதிகரிப்பது மற்றும் குறிப்பாக தற்காலிக நிவாரண மையத்தில் (PPS) இருக்கும் போது நிலையான இயக்க நடைமுறைகளுக்கு (SOP) இணங்குவதை உறுதி செய்வது உட்பட அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளுக்கும் இணங்குமாறும் அஹ்மட் அழைப்பு விடுத்தார்.

இன்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி கிளாந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை 853 பேராக இருந்த பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,554 பேராக உயர்ந்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கோலக்கிராய், தானா மேரா, ஜெலி மற்றும் பாசீர் மாஸ் ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய 28 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here