ஹனோய், ஆசியான் டிஜிட்டல் அமைச்சர்கள் கூட்டத்தின் போது நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான ஆசியான் டிஜிட்டல் விருதுகள் விழாவில் (ADGMIN) மூன்று மலேசிய நிறுவனங்கள் சிறப்பான புள்ளிகளைப் பெற்று நாட்டின் திறன்களையும் பங்களிப்புகளையும் வெளிப்படுத்தியது. தனியார் துறை பிரிவில் UMCH Technology Sdn Bhd முதலிடத்தைப் பிடித்தது. அதே நேரத்தில் Innoveam Sdn Bhd அதே பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றது. Enfiniti Interactive டிஜிட்டல் உள்ளடக்கப் பிரிவில் Xperiences Sdn Bhd முதலிடத்தை (தங்கம்) வென்றது. வெற்றியாளர்கள் நேற்று இரவு ஒரு காலா விருந்து, பரிசு வழங்கும் விழாவின் போது பெயர்கள் அறிவிக்கப்பட்டன.
UMCH டெக்னாலஜியின் ‘WeHealth’ வழி, நாள்பட்ட நோய் பராமரிப்பு, முதன்மை பராமரிப்பை மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு புதுமையான, விரிவான, ஆதார அடிப்படையிலான டிஜிட்டல் சுகாதார அமைப்பாகும். இந்த திட்டம், மொபைல் செயலிகள், IoT சாதனங்கள், சிறப்பு போர்டல்கள் ஆகியவற்றின் மூலம் மருத்துவர்களையும் நோயாளிகளையும் இணைக்கும் ஒரு தளத்தை வழங்குகிறது. இது மலாயா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் உள்ளூரில் உருவாக்கப்பட்டது.
Innoveam’s Collaveo திட்டம் அடுத்த தலைமுறை தொழில்துறை கணினி மற்றும் 3D
டேட்டாஆப்ஸ் தளமாகும். இது முப்பரிமாண டிஜிட்டல் இரட்டையர்கள், நிகழ்நேர செயல்பாட்டு தரவு, செயற்கை நுண்ணறிவு (AI) / இயந்திர கற்றல் (ML) பகுப்பாய்வு, பொறியியல்-தர உருவகப்படுத்துதல் ஆகியவற்றை தொழில்களுக்கான பாதுகாப்பான சூழலாக ஒன்றிணைக்கிறது.
மலேசியாவின் லங்காவியில் அமைந்துள்ள 100 மில்லியன் ஆண்டுகள் பழமையான மழைக்காடில் உருவாக்கப்பட்ட, நாட்டின் முதல் முழுமையான இரவு அனுபவ சுற்றுலா தளமான “ட்ரீம் ஃபாரஸ்ட் லங்காவி” திட்டத்தின் சிருஷ்டிப்பான கதை சொல்லல் முறையால் என்ஃபினிட்டி இன்டர்ஆக்டிவ் எக்ஸ்பீரியன்சஸ் (Enfiniti Interactive Xperiences) நடுவர்களின் மனதை வென்றுள்ளது.
மலேசிய நிறுவனங்கள் பெற்றுள்ள இந்தச் சாதனைகள், பல்வேறு துறைகளை ஊடறுத்து வளர்ந்து வரும் நாட்டின் உயிர்ப்பான டிஜிட்டல் புதுமைத்திறனை வெளிப்படுத்துவதாக இலக்கியவியல் அமைச்சர் கோபிந்த் சிங் தியோ தெரிவித்தார்.
சுகாதாரம், சுற்றுலா, கட்டிடத் துறைகளில் வெற்றியாளர்கள் எங்களிடம் உள்ளனர். தங்களின் துறைகளுக்கு உதவும் புதிய யோசனைகள் மற்றும் தீர்வுகளுடன் தொழில்நுட்ப எல்லைகளை விரிவுபடுத்திக் கொண்டு, தொடர்ந்து புதுமை செய்து வரும் இன்னும் பல மலேசிய நிறுவனங்கள் இருப்பதை நான் அறிவேன் என, ஹனோயில் இன்று நிறைவடையும் 6ஆவது ADGMIN மாநாட்டில் பங்கேற்றிருக்கும் இருக்கும் கோபிந்த் கூறினார்.
மேலும் அவர், புதுமைக்கு உகந்த கொள்கைகளும் நிலையான கட்டமைப்புகளும் இருந்தால்தான் இத்தகைய கண்டுபிடிப்புகள் சாத்தியமாகின்றன. உள்ளூர் ஆராய்ச்சியாளர்கள், படைப்பாளர்களின் புதுமைகளை ஊக்குவிக்க டிஜிட்டல் அமைச்சகம் தொடர்ந்து ஆதரவு வழங்கும். அவர்களின் தயாரிப்புகள் மலேசியா, தென்கிழக்கு ஆசியாவின் டிஜிட்டல் பொருளாதாரங்களுக்கு பெரும் பங்களிப்பை அளிக்கும் என்றார். விருது பெற்ற புதுமையாளர்களின் தலைமையில், மலேசியாவை முன்னணி டிஜிட்டல் புதுமை மையமாக மாற்றும் வகையில், மேலும் பல மலேசியர்கள் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி தொடர்ந்து புதுமை செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையையும் கோபிந்த் சிங் தியோ வெளிப்படுத்தினார்.










