கோலாலம்பூர், சுல்தான் இஸ்கந்தர் நெடுஞ்சாலை வழியாக பல்நோக்கு வாகனம் (எம்பிவி) நான்கு சக்கர வாகனத்துடன் (4 டபிள்யூடி) மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர். கூட்டரசு பிரதேச தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைத் தலைவர் ஹம்தான் சமத் கூறுகையில், காலை 10.50 மணியளவில் நேருக்கு நேர் மோதியது குறித்து தங்களுக்கு அழைப்பு வந்தது.
4WD டிரைவர் 27 வயதான அலிஃப் அஸ்ரப் அபு, சிறு காயங்களுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எம்பிவியில் இருந்த தம்பதியும் அவர்களது இரண்டு குழந்தைகளும் உயிரிழந்தனர். பி. மிலன் தமானி 32, மற்றும் சி டினிஷா 31 என்றும், அவர்களின் குழந்தைகள் இஷான் இவான்(3) மற்றும் ரிஹான் இவான் (4) என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.