`இந்தியா எங்களை ஆதரிக்கவில்லை..!’ – உக்ரைன் எல்லையில் தாக்கப்படுகிறார்களா இந்திய மாணவர்கள்?

ஐ.நா.சபையில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா உக்ரைனை ஆதரிக்கவில்லை எனக்கூறி உக்ரைன் ராணுவ வீரர்கள் இந்திய மாணவர்களை அடித்து மிரட்டுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

உக்ரைனில் விமான  போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், அண்டை நாடுகளான ருமேனியா, போலந்து, ஹங்கேரி ஆகிய நாடுகளுக்கு விமானங்களை அனுப்பி அங்கிருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள். மாணவர்கள் 72 மணி நேரத்திற்கும் மேலாக கடும் குளிரில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

உக்ரைனிலிருந்து போலந்து எல்லை வழியாக வரும் இந்திய மாணவர்களை உக்ரைன் வீரர்கள் அடித்து மிரட்டுவதாகவும், சிலரிடமிருந்து செல்போன்களை பறித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், உக்ரைன் ராணுவம் இந்தியா மாணவர்களை நோக்கி “உங்கள் இந்திய அரசு எங்களுக்கு ஆதரவளிக்கவில்லை, அதனால் நாங்கள் ஏன் உங்களுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்” எனக் கடுமையாக பேசுவதாகவும் இந்திய மாணவர்கள் பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடர்பான ஐ.நா வாக்கெடுப்பில் இந்தியா விலகிக்கொண்டதால், உக்ரைன் எல்லையைக் கடக்கும் போது இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here