குயின்ஸ்லாந்தில் வெள்ளம் காரணமாக அங்கிருந்த 110 மலேசிய மாணவர்கள் நிவாரண மையங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்

கோலாலம்பூர், பிப்ரவரி 28 :

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, மொத்தம் 110 மலேசிய மாணவர்கள் தற்காலிக நிவாரண மையங்களுக்கு வெளியேற்றப்பட்டனர் என்று வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் அப்துல்லா கூறினார்.

பாதிக்கப்பட்ட மாணவர்களில் 75 பேர் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் பல்வேறு நிறுவனங்களின் கீழ் உள்ள தற்காலிக நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் 35 பேர் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர் என்று, இன்று டூவிட்டரில் பதிவிட்ட ஒரு டுவீட் மூலம் தெரிவித்தார்.

குயின்ஸ்லாந்தில் கல்விகற்கும் மொத்தம் 348 மலேசிய மாணவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்று
அவர் கூறினார்.

கான்பெராவில் உள்ள மலேசிய தூதரகம், பிரிஸ்பேனில் உள்ள மலேசிய சமூகத்தின் பிரதிநிதிகள், சான் வை கியோங் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள மலேசிய மாணவர் கவுன்சில் தலைவர் ரசின் ஹாடி (Masca) ஆகியோருடன் இணைந்து பாதிக்கப்பட்ட மலேசியர்களை வெள்ள நிவாரண மையங்களுக்கு இடமாற்றம் செய்வதை கண்காணித்து மற்றும் ஒருங்கிணைத்து வருவதாக அவர் கூறினார்.

“வெள்ள நிலைமை அடுத்த மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று குயின்ஸ்லாந்து மாநில அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பு மூலம் தெரிவித்துள்ளது.

சிட்னியில் உள்ள மலேசிய தூதரகத்துடன் இணைந்து கான்பெராவில் உள்ள கிளை நிறுவனமும் எப்போதும் விழிப்புடன் இருப்பதாகவும், வெள்ளத்தின் வளர்ச்சி குறித்து அவ்வப்போது கண்காணித்து அறிக்கை அளித்து வருவதாகவும் சைபுடின் கூறினார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மலேசியர்கள், மலேசிய தூதரகத்தை நேரடியாக +61261 200 300/310 அல்லது +61416 334 901 அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here