ஷா ஆலம் கிளப்பின் மது தடை பொது குழுவால் எடுக்கப்பட்டது – மாநில செயலாளர் அல்ல

கிளப் ஷா ஆலம் சிலாங்கூர் வளாகத்தில் மதுவைத் தடை செய்வது அதன் பொதுக் குழுவால் எடுக்கப்பட்டது என்றும் சிலாங்கூர் மாநிலச் செயலாளர் அல்ல என்றும் கூறுகிறது.  இன்று ஒரு அறிக்கையில் பொது மேலாளர் முகமது ஷபீக் சுல்தான் முகமது அதன் பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் முடிவு செய்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று தெளிவுபடுத்தினார்.

மது விற்பனை மற்றும் நுகர்வு தடை முடிவு கழகத்தின் பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களால் எடுக்கப்பட்டது.  புதிய விதி பிப்ரவரி 12 முதல் அமலுக்கு வந்தது. உறுப்பினர்கள் மற்றும் விருந்தினர்கள் கூட வளாகத்திற்குள் மதுவைக் கொண்டு வர அனுமதி இல்லை.

சிலாங்கூர் மாநிலச் செயலாளர் அலுவலகத்தின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது. தடை பற்றிய செய்தி வெளியானதிலிருந்து  கிளப்பின் மிக மூத்த உறுப்பினர்கள் சிலர்  மதுவிலக்கு  தடை நீடித்தால் தங்கள் உறுப்பினர் பதவியை விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பதாகக் கூறினர்.

பார் நேரத்தைக் குறைப்பது பற்றி நிர்வாகம் ஏன் பரிசீலிக்க முடியாது? இப்போதுள்ள நிலையில் மேல்மாடியில் மட்டுமே மது அருந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது teetotallers மட்டுமல்ல. அனைவருக்கும் ஒரு கிளப் என்பதைக் காட்ட நேரத்தைக் குறைக்கலாம்  என்று ஒரு உறுப்பினர் கூறினார். முடிவு மறுபரிசீலனை செய்யப்படும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் மேலும் கூறினார்.

தடையால் தான் ஏமாற்றம் அடைந்ததாக வலியுறுத்திய மற்றொரு உறுப்பினர், கிளப் எப்போதுமே பல இனங்களைக் கொண்டது என்றும்   குறிப்பிட்டார். கடந்த டிசம்பரில் மாநில அரசாங்கத்தின் அறிவுறுத்தலைப் பின்பற்றி மலாக்கா  ஆயர்  குரோ கன்ட்ரி கிளப்பில் இதேபோன்ற மது அருந்துதல் தடை செய்யப்பட்டதை அடுத்து இந்த முடிவு அதிகம் பேசப்படும் விஷயமாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here