நான்கு பேர் கொண்ட இந்திய குடும்பம் பலியான விபத்தில் சிக்கிய நான்கு சக்கர வாகனம் (4WD) ஓட்டுநர் விரைவில் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார். கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் தலைவர் ஶ்ரீபுடின் முகமது சலே இன்று, போலீசார் தங்கள் விசாரணையை முடித்துவிட்டதாக தெரிவித்தார்.
நாங்கள் ஓட்டுநரின் அறிக்கையை பதிவு செய்துள்ளோம். அவருடைய சிறுநீர் பரிசோதனை எதிர்மறையாக இருந்தது. மேலதிக அறிவுறுத்தலுக்காக விசாரணை ஆவணங்களை துணை அரசு வழக்கறிஞரிடம் (டிபிபி) நாளை பரிந்துரைப்போம் என்றார்.
ஓட்டுனர் தடுத்து வைக்கப்பட்டுள்ளாரா என்று கேட்டதற்கு, அவரது முதுகுத்தண்டில் காயம் ஏற்பட்டுள்ளதால் அதற்கு சிகிச்சை எடுக்க வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு போலீசார் அவ்வாறு செய்யவில்லை என்று ஶ்ரீபுடின் கூறினார்.
பிப்ரவரி 27 அன்று, 4WD டிரைவர் சுல்தான் இஸ்கந்தர் நெடுஞ்சாலை வழியாக தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததால் எதிர் பாதையில் சறுக்கி நான்கு பேர் கொண்ட குடும்பத்தை ஏற்றிச் சென்ற கார் எதிரே வந்த கார் மீது மோதியது.
உயிரிழந்தவர்கள் பி. மிலன் தமானி 32, சி. டினிஷா 31, மற்றும் அவர்களது குழந்தைகள் இஷான் இவான், மூன்று மற்றும் ரிஹான் இவான், நான்கு என அடையாளம் காணப்பட்டனர். விபத்தில் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.