அமெரிக்க ராணுவத்தில் இணைந்த தமிழ் நடிகை

சினிமாவை விட்டுவிட்டு அமெரிக்க இராணுவத்தில் தமிழ் நடிகை இணைந்த உள்ள தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே சினிமா துறையில் நுழைய பலரும் போராடி வருகிறார்கள்.

வாய்ப்பிற்காக பண ரீதியாகவும், மன ரீதியாகவும் பல பேர் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். இதில் சினிமாவில் நுழைவதற்கு அதிர்ஷ்டமும் தேவை. அப்படித்தான் ரஜினி, அஜீத், விக்ரம், சிவகார்த்திகேயன் என பல நடிகர்கள் தங்களுடைய கடும் உழைப்பினாலும் முயற்சியினாலும் சினிமாவில் நுழைந்தார்கள்.

இப்படி திரைத்துறை உள்ளிட்ட கலை துறையில் ஈடுபடுவது தங்கள் வாழ்நாள் சாதனையாக கருதும் நிலையில் தமிழ் நடிகை ஒருவர் ராணுவத்தில் இணைந்து சாதித்து இருக்கிற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அவர் வேற யாரும் இல்லைங்க, காதம்பரி படத்தின் நாயகி அகிலா. 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் காதம்பரி. இது இயக்குனர் அருள் இயக்கத்திலும் நடிப்பில் வெளிவந்த படம். இந்த படம் முழுக்க முழுக்க திகில் படமாக உருவாக்கி இருப்பதால் பாடல்கள் இல்லாமல் படத்தை எடுத்திருந்தார்கள்.

கதாநாயகன் தன்னுடைய காதலி, தங்கை உட்பட 4 பேர் உடன் ஒரு காட்டுப் பகுதிக்கு காரில் செல்கிறார். செல்லும் வழியில் கார் விபத்துக்கு உள்ளாகிறது. அந்த சமயத்தில் மழை பெய்ததால் அருகில் உள்ள பங்களாவில் ஓய்வெடுக்கச் சொல்கின்றனர்.

காதம்பரி படம்:

அனைவரும் பங்களாவை சுற்றி பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்கிறது. பிறகு சில அமானுஷ்ய விஷயங்கள் பங்களாவில் நடக்கிறது. கடைசியில் என்ன ஆனது? பங்களாவில் இருந்து தப்பித்தார்களா? அந்த குழந்தை யார்? குழந்தை ஏன் அங்கு இருந்தது? என்பது தான் படத்தின் மீதி கதை. இது சமூக கருத்தை வலியுறுத்தி உருவான திகில் திரைப்படம்.

இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமானவர் அகிலா நாராயணன். இவர் அமெரிக்க வாழ் தமிழ் பெண். இவருக்கு கலை மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக தன்னுடைய தனிப்பட்ட முயற்சியினால் போராடி தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

அகிலா நாராயணின் சாதனை:

நடிப்பதோடு மட்டுமில்லாமல் பிரபல பாடகியாகவும் அகிலா நாராயணன் வலம் வந்தார். இந்நிலையில் அகிலா இராணுவத்தில் இணைந்து இருக்கிற தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இப்படி கலை துறையோடு தன்னுடைய சாதனைப் பயணத்தை நிறுத்திக் கொள்ளாமல் சமூக சேவை செய்ய நினைத்து இருக்கிறார் அகிலா.

பின் கடின பயிற்சிகளையும், முயற்சிகளையும் மேற்கொண்டு அமெரிக்க ராணுவத்தில் பட்டம் பெற்றிருக்கிறார். அமெரிக்க இராணுவத்தில் பட்டம் பெறுவது என்பது சாதாரண விஷயமில்லை.

அமெரிக்க ராணுவத்தில் இணைந்த நடிகை:

மிக சவாலான ஒன்று. இதற்கு அகிலா உடைய குடும்பத்தாரிடம் சம்மதம் தெரிவித்து இருக்கிறார்கள். இதனால் கடுமையாக பல மாதங்கள் பயிற்சிகளை பெற்று வெற்றிகரமாக முடித்து பட்டம் பெற்றிருக்கிறார் அகிலா.

தற்போது அவர் அமெரிக்க ராணுவத்தில் வழக்கறிஞராக நுழைந்துள்ளார். இதன் மூலம் அமெரிக்க ராணுவத்தில் இணைந்த முதல் தமிழ் நடிகை என்ற பெருமையை அகிலா நாராயணன் பெற்றிருக்கிறார். மேலும், அமெரிக்க ராணுவத்தின் பலவிதமான பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்த வீரமும் விவேகமும் கொண்ட பெண்மணியாக அகிலா திகழ்ந்து இருக்கிறார் என்றே சொல்லலாம்.

அகிலா நாராயணன் கூறியது:

இதுகுறித்து அகிலா நாராயணன் கூறியிருப்பது, அமெரிக்க ராணுவ வீரர்களுக்கான சட்ட ஆலோசகராக செயலாற்ற இருக்கிறேன். நான் வாழும் நாட்டுக்காக சேவை செய்வதற்காகவே இத்துறையில் இணைந்துள்ளேன். மனதார என்னுடைய சேவையை உறுதியோடு செய்வேன் என்று கூறி இருக்கிறார். இந்த சேவை மனப்பான்மைக்கு அகிலா நாராயணனின் பார்த்து பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் அவருடைய குடும்பத்தினருக்கும் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தற்போது இந்த தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து ரசிகர்கள் பலரும் அகிலாவிற்கு சல்யூட் அடித்து பாராட்டு மழையை குவித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here