வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை – தென்கொரியா தகவல்

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், அணு ஆயுதங்களை தாக்கிச்செல்லும் ஏவுகணைகள் ஆகியவற்றை அடிக்கடி சோதித்துப் பார்த்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்துவருவதை வடகொரியா வாடிக்கையாக கொண்டுள்ளது. அமெரிக்காவின் பொருளாதார தடைகளை பொருட்படுத்தாது தொடர்ந்து அடாவடி நடவடிக்கையில் வடகொரியா ஈடுபட்டு வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

அந்த வகையில், கொரிய தீபகற்பத்தின் கிழக்குப்பகுதியில் உள்ள கடலை நோக்கி வடகொரியா ஏவுகணை ஏவி சோதனை நடத்தியிருப்பதாக அம்மாநிலத்தில் உள்ள ராணுவ அமைப்புகள் தெரிவித்துள்ளன.  தென்கொரியாவில் அதிபர் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here