எல்லை மூடலால் ஜோகூர் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்கிறார் முஹிடின்

ஜோகூர் மாநில  எல்லை திறக்காமல் இருப்பது மிக மோசமாகப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக என்று தேசிய மீட்புக் குழுத் தலைவர் முஹிடின் யாசின் கூறினார். சிங்கப்பூருக்கு வேலை நிமித்தமாகச் சென்ற சுமார் 300,000 ஜோகூர் குடியிருப்பாளர்கள் எல்லை மூடப்பட்டதன் விளைவாக தங்கள் வருமான ஆதாரத்தை இழந்துள்ளனர் என்று அவர் கூறினார்.

அவர்களின் தற்போதைய நிலை எனக்குத் தெரியாது. வாழ்க்கையைத் தொடர்வதற்கும், உணவிற்கும் அவர்கள் சவால்களை எதிர்கொள்கிறார்களா? நாம் தீர்க்க வேண்டிய பிரச்சனை இதுதான் என்று அவர் இன்று ஒரு உரையாடல் அமர்வில் கூறினார்.

எல்லைகளை மீண்டும் திறப்பதன் மூலம் மலேசியாவிற்கு 28 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் சாத்தியமான துறைகளில் இருந்து RM80 பில்லியனுக்கும் அதிகமான வருவாயை நாடு ஈட்ட முடியும் என்று முஹிடின் கூறினார்.

கட்டாய தனிமைப்படுத்தல் தேவை இல்லாமல் மார்ச் 1 முதல் அனைத்துலக எல்லைகளை முழுமையாக மீண்டும் திறக்க வேண்டும் என்று மீட்பு கவுன்சில் முன்பு பரிந்துரைத்துள்ளது. எவ்வாறாயினும், அமைச்சரவையின் ஒப்புதலுக்காக புதிய விதிமுறைகள் தயாரிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here