கடத்த முயன்றதாக நம்பப்படும் 8,448 கிலோ சமையல் எண்ணெய் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார துறையினரால் பறிமுதல்

கோத்தா பாரு, மார்ச் 6 :

இன்று இங்குள்ள கம்போங் அவுர் தூரியில் உள்ள ஒரு வீட்டில், உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் (KPDNHEP) அதிகாரிகளால் நடத்தப்பட்ட சோதனையில், மானிய விலையில் பெற்றுக்கொள்ளப்பட்டதும் கடத்த முயன்றதாக நம்பப்படுவதுமான 8,448 கிலோகிராம் சமையல் எண்ணெயை பறிமுதல் செய்யப்பட்டது.

பொது நடவடிக்கைப் படையின் (PGA8) 8வது பட்டாலியன் மற்றும் கடல்சார் போலீஸ் படை, பிராந்தியம் 3, பெங்கலான் குபோர் ஆகியோர் இணைந்து அதிகாலை 5.20 மணியளவில் நடத்திய ஒருங்கிணைந்த நடவடிக்கையில், RM21,120 மதிப்புள்ள ஒரு கிலோ சமையல் எண்ணெய் பாக்கெட்டுக்கள் கைப்பற்றப்பட்டது.

கிளாந்தான் KPDNHEP தலைமை அமலாக்க அதிகாரி, அசானிசம் அபாண்டி ஜூரி இதுபற்றிக் கூறுகையில் , புலனாய்வுத் தகவலின் விளைவாக, பகாங்கில் இருந்து மானிய விலையில் சமையல் எண்ணெயை இறக்கிக் கொண்டிருந்த மூன்று டன் லோரியின் நகர்வைக் கண்டறிந்தோம்.

சமையல் எண்ணெய் பின்னர், கிளாந்தான் ஆற்றின் கரையில் உள்ள ஒரு வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது, அது தற்காலிக போக்குவரத்துக்கான இடமாக பயன்படுத்தப்பட்டது.

“கண்காணிப்பு நடத்தும் போது, ​​​​குழுவினர் நான்கு பேர் ஒரு வீட்டிற்கு சமையல் எண்ணெயை இறக்கிக்கொண்டிருந்ததைக் கண்டறிந்தனர். தமது குழு இருப்பதை அறிந்த சந்தேக நபர்கள் அருகில் உள்ள புதருக்குள் தப்பிச் சென்றனர்.

“இந்த பொருட்களை கிளாந்தானுக்கு வெளியில் இருந்து, அதாவது பகாங்கில் இருந்து கொண்டு வந்து, அதிகாரிகளால் கண்டறியப்படாமல் இருக்க அதிகாலையில் செயல்படுவதே அவர்களின் செயல்பாடாகும்.

“அதிக தேவை காரணமாக அண்டை நாடுகளுக்கு கடத்தப்படுவதற்கு முன்பு சமையல் எண்ணெய் நாட்டின் எல்லைக்கு கொண்டு வரப்படும்” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆய்வு செய்ததில் ஒரு கிலோ மதிப்புள்ள எண்ணெய் பாக்கெட்டுக்கள் அனைத்தும் மானிய விலையில் பெறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கடத்தல் முயற்சியுடன் சம்பந்தப்பட்ட ஒரு லோரி, நான்கு சக்கர மிட்சுபிஷி பஜேரோ மற்றும் புரோட்டான் வாஜா கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர், இதன் மதிப்பு மொத்தம் RM83,120 என்றும் அவர் கூறினார்.

அத்தோடு இந்த வழக்கு, வழங்கல் கட்டுப்பாடு சட்டம் 1961-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.

“கிளாந்தானின் அனைத்து வணிகர்களையும் சட்டத்தை கடைபிடிக்குமாறு உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகம் எச்சரிக்கிறது என்றும் சமரசம் இல்லாமல் இந்த குற்றங்களைச் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here