தைப்பிங், மார்ச் 7 :
இங்குள்ள ஜாலான் தாமிங் சாரி, சென் லூங் பசாரில் உள்ள 50 சிறு கடைகளில் 9 சிறு கடைகள் இன்று தீயில் எரிந்து நாசமாயின.
தைப்பிங் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையத் தலைவர் ரஃபீல் ஹைருல் ரிச்சர்ட் கூறியதாவது:
அதிகாலை 2 மணியளவில் நடந்த சம்பவத்தில், கடைகள் 40 சதவீதம் சேதமடைந்தது.
“பத்து கூராவ் மற்றும் கமுண்டிங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட தீ அணைக்கும் நடவடிக்கை, இன்று காலை 4.57 மணிக்கு முடிவடைந்தது,” என்று இன்று தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது என்றார்.
தைப்பிங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர், தீயைக் கட்டுப்படுத்தும் போது சிறிய வெடிப்பு காரணமாக முகத்தில் காயம் ஏற்பட்டதாக அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட அப்துல் ஹக்கீம் அஹ்மட் ஜைதி, 30, தற்போது தைப்பிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.









