கோத்தா திங்கி, மார்ச் 8:
நேற்று, இங்கு ஜாலான் பெனாவார் – புங்காய் 16ஆவது கிலோமீட்டரில் மலேசிய ஆயுதப்படை (ATM) டிரக் விபத்துக்குள்ளானதில், ஒரு இராணுவ வீரர் கொல்லப்பட்டார் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர்.
கோத்தா திங்கி மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் ஹுசின் ஜமோரா இதுபற்றிக் கூறுகையில், பிற்பகல் 3.40 மணியளவில் இராணுவ டிரக் மெர்சிங்கில் உள்ள Pos Tg லெமனில் இருந்து பெங்கராங்கில் உள்ள Pos Tg செப்பாங்கிற்குச் சென்று கொண்டிருந்தபோது, இந்த விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
“விபத்தின்போது ஒரு அதிகாரி மற்றும் நான்கு இராணுவ உறுப்பினர்கள் பயணித்துக்கொண்டிருந்தனர். இந்த விபத்தில் 23 வயதான இராணுவ உறுப்பினர் ஒருவர் சம்பவ இடத்தில் இறந்தார்.
22 முதல் 38 வயதுக்குட்பட்ட நாளாவர் காயமடைந்தனர், இவர்கள் அனைவரும் கோத்தா திங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்,” என்று அவர் செவ்வாய்க்கிழமை (இன்று) வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அவரைப் பொறுத்தவரை, முதற்கட்ட விசாரணையில், விபத்துக்கான காரணம் டிரக்கை வெட்டத் தவறியதே என்று நம்பப்படுகிறது, இருப்பினும் இது தொடர்பில் மேலும் விசாரணைகள் இன்னும் நடந்து வருகிறது.
“இந்த வழக்கு சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41 (1) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.








