ஜோகூர் பயணத்திற்கு 50% கட்டணச் சலுகையா? பிளஸ் மறுக்கிறது

ஜோகூர் மாநிலத் தேர்தலில் (PRN) வாக்களிக்கத் திரும்புவோருக்கு 50% கட்டணச் சலுகை வழங்குவது குறித்த ஊடக அறிக்கையை வெளியிடவில்லை என PLUS Malaysia Berhad (PLUS) தெரிவித்துள்ளது. PLUS இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களை குழப்பும் வகையில் நிறுவனத்தின் சின்னத்தை பயன்படுத்தும் செயலை தீவிரமாக எடுத்துக்கொள்கிறது.

சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் நெடுஞ்சாலை சலுகை நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஜோகூர் PRN உடன் இணைந்து நாட்டின் தெற்குப் பகுதிக்கான அனைத்துப் பயணங்களுக்கும் மார்ச் 11ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 50% தள்ளுபடி வழங்கப்படும் என்று  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here