தனது சகோதரரை (இரட்டையர்) கொலை செய்த குற்றத்திற்காக ஆடவர் கைது

பந்திங், கம்போங் ஶ்ரீ சீடிங்கில் உள்ள வாடகை வீட்டில் தனது இரட்டை சகோதரரை கத்தியால் குத்தியதாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கோல லங்காட் மாவட்ட காவல்துறைத் தலைவர் அஹ்மத் ரித்வான் முகமட் நோர் @ சலே கூறுகையில், வெள்ளிக்கிழமை மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட விவசாயி ஒருவரின் மரணம் குறித்து பந்திங் மருத்துவமனை அளித்த புகாரைத் தொடர்ந்து 36 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

உயிரிழந்தவர் முதலில் தனது முதலாளியிடம் உதவி கோரியதாக நம்பப்படுகிறது. முதலாளி  அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அந்த நபர் கத்தியால் குத்தப்பட்டிருந்ததால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில்  இறந்தார்.

பாதிக்கப்பட்டவரின் முதலாளியால் கோல லங்காட் போலீஸ் மாவட்டத் தலைமையகத்திற்கு அழைத்து வரப்பட்ட  சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டதாக துணைத் தலைவர் அஹ்மத் ரித்வான் கூறியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here