சுங்கை சிப்புட், மார்ச் 14 :
தொடர் கனமழையால் சுங்கை சிப்புட்டை சுற்றியுள்ள பல பகுதிகளில் நேற்று இரவு முதல் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மலேசியாவின் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) பேராக் செய்தித் தொடர்பாளர் இதுபற்றிக் கூறுகையில், பாதிக்கப்பட்ட பகுதிகளான தாமான் கிளெடாங் இரண்டாம் கட்டம், கம்போங் சே ஜைனால் மற்றும் கம்போங் முஹிப்பா மற்றும் கம்போங் ராமசாமி ஆகிய இடங்களில் ஒன்றரை மீட்டர் அளவு உயரத்துக்கு வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக அவரது துறைக்கு இரவு 10.06 மணியளவில் அழைப்பு வந்தது என்றும் சுங்கை சிப்புட் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் உறுப்பினர்களுக்கு ஈப்போ தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் உறுப்பினர்கள் உதவியுடன் மேலும் இரண்டு தன்னார்வ தீயணைப்பு படையினர் (செமோர், பெக்கான் பாரு) அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டனர் என்றார்.
“JBPM மூலம் ஒரு வயதான பெண் அருகிலுள்ள அவரது அண்டை வீட்டிற்கு வெளியேற்றப்பட்டார்.
“நீர் மட்டம் குறைந்ததைத் தொடர்ந்து அதிகாலை 3.30 மணிக்கு மீட்பு நடவடிக்கை முடிவடைந்தது, ஆனால் மீட்புக் குழு இன்னும் அப்பகுதியை கண்காணித்து வருகிறது,” என்று அவர் இன்று அதிகாலை வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.







