இந்திய குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் மரணத்திற்கு காரணமான வாகன ஓட்டுநர் மீது நாளை குற்றஞ்சாட்டப்படும்

ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரை பலிகொண்ட விபத்தில் சிக்கிய நான்கு சக்கர வாகனத்தின் (4WD) ஒட்டுநருக்கு எதிராக நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளது. பிப்ரவரி 27 அன்று நடந்த விபத்து, கோலாலம்பூரில் உள்ள லெபுராயா சுல்தான் இஸ்கந்தர் வழியாக பயணித்த வாகனம் எதிர் பாதையில் சறுக்கி நான்கு பேர் பயணித்த  கார் மீது மோதியது.

அந்த விபத்தில் உயிரிழந்த பி. மிலன் தமானி 32, சி. டினிஷா 31, மற்றும் அவர்களது குழந்தைகள் இஷான் இவான், மூன்று மற்றும் ரிஹான் இவான் என்ற நான்கு பேர் அடையாளம் காணப்பட்டனர்.

கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறைத் தலைவர் ஶ்ரீபுதீன் முகமட் சலே, சந்தேக நபர் நாளை காலை கோலாலம்பூரில் உள்ள ஜாலான் துவாங்கு அப்துல் ஹலிமில் உள்ள குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார் என்பதனை உறுதிப்படுத்தினார். முன்னதாக, இந்த விபத்து தொடர்பான விசாரணையை போலீசார் இந்த மாத தொடக்கத்தில் முடித்ததாக கூறப்படுகிறது.

ஶ்ரீபுதீனின் கூற்றுப்படி, 4WD வாகனத்தின் 27 வயது ஓட்டுநருக்கு முதுகுத்தண்டில் காயம் ஏற்பட்டிருப்பதால் சிகிச்சை செய்ய வேண்டியதை கருத்தில் கொண்டு போலீசார் அவரைத் தடுப்பு காவலில் வைக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here