ஷா ஆலாம், மார்ச் 16 :
சிலாங்கூரில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 613 தொலைத்தொடர்பு கோபுரங்கள் சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக இன்று நடந்த மாநில சட்டமன்ற அமர்வின் போது தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டின் பிற்பகுதியில், மாநில உள்ளாட்சி, பொதுப் போக்குவரத்து மற்றும் புதிய கிராம மேம்பாட்டுக் குழுவின் (YTSB) தலைவர் Ng Sze Han, யாகின் டெலிசெல் செண்டிரியான் பேர்ஹார்ட்டின் ஒத்துழைப்புடன், மாநில அரசு அதன் உள்ளூர் அதிகாரிகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு செயல்பாடு மற்றும் தள தணிக்கை அறிக்கையிலிருந்து இந்த எண் பெறப்பட்டது என்றார்.
“இதுபற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால், மாநில அரசு கிட்டத்தட்ட RM1.2 மில்லியன் வருவாயை இழக்க நேரிடும்,” என்று அவர் வோங் சியூ கிக்கு (PH-பாலகோங்) கேட்ட கேள்விக்கு பதிலளித்தார.
சட்டவிரோத தொலைத்தொடர்பு கோபுரத்தின் உரிமையாளர்களுக்கு அதனை இடிப்பது தொடர்பில் நோட்டீஸ் வழங்குவது தொடங்கி, மார்ச் 31ஆம் தேதிக்குள் உள்ளூர் அதிகாரிகளால் அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பெரும்பாலான உரிமையாளர்கள், குடியிருப்பாளர்களின் கருத்துகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் தொழில்நுட்ப மதிப்பாய்வு உட்பட, முறையான செயல்முறையை மேற்கொள்ளாமலேயே தொலைத்தொடர்பு கோபுரங்களை கட்டியுள்ளனர் என்று Ng விவரித்தார்.
மேலும் இதற்கு முன் அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்விக்கு, “தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன், தொலைத்தொடர்பு நெட்வொர்க் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்து, தகுந்த மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றார்.









