மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஸ்டீவன், கெல்வின் என்ற இருவரை தேடுகிறது

கோலாலம்பூர், மார்ச் 16 :

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (SPRM) சரவாக் அலுவலகம், ஊழல் வழக்கின் விசாரணைக்கு உதவுவதற்காக இரண்டு நபர்களை தேடுகிறது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இது தொடர்பில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், தேடப்படும் முதல் நபர், ஸ்டீவன் ஜாங் தியன் வுன், 22, அவர் இறுதியாக எண் 372, லோரோங் 6 பத்து 17, ஜாலான் கூச்சிங்/செரியான் சிபுரான், 94200 கூச்சிங், சரவாக் என்ற முகவரியில் இருந்துள்ளார்.

இரண்டாவது நபரான கெல்வின் சான் பெக்கி, 21, என்பவர் கடைசி முகவரியாக 118-A கம்போங் பெரடோக் பத்து 21, ஜாலான் கூச்சிங் / செரியான், 94200 கூச்சிங், சரவாக் என்ற முகவரியை வைத்திருந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட இரு நபர்களைப் பற்றிய தகவல் தெரிந்த பொதுமக்கள், விசாரணை அதிகாரியான ஜஸ்விந்தர் கவுர் ஏபி லக் விந்தர் சிங்கை 019-4266169 அல்லது 082-467701 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here