புதிய குறைந்த பட்ச சம்பள விகிதமான 1,500 வெள்ளி மே 1ஆம் தேதி முதல் அமல் – பிரதமர் தகவல்

வரும் மே1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் புதிய குறைந்தபட்ச ஊதிய விகிதமான RM1,500 ஐ அமல்படுத்த அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது என்று டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.

இருப்பினும், குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்துவது பெரிய நிறுவனங்களின் முதலாளிகளை மட்டுமே உள்ளடக்கும் என்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை   ஈடுபடுத்தாது என்றும் பிரதமர் கூறினார்.

அம்னோ துணைத் தலைவராகவும் இருக்கும் அவர், இன்று உலக வர்த்தக மையத்தில் நடந்த அம்னோவின் ஆண்டுக்கூட்டத்தில்  (PAU) 2021 இல் நிறைவு உரையை ஆற்றியபோது இவ்வாறு கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here