தேசிய முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பான ‘MySiren’-இன் சோதனை எச்சரிக்கைகள், பெர்லிஸில் உள்ள படாங் பெசார், சபாவில் உள்ள புலாவ் செபாட்டிக், தவாவ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கைபேசிகளுக்கு கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் சென்றடைந்தன என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார். இன்று காலை நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையின் போது, எச்சரிக்கைகள் பெறப்பட்டவுடன், தேசிய தகவல் பரவல் மையம் (Nadi) மற்றும் தகவல் துறை ஆகியவை உடனுக்குடன் கருத்துகளைத் தெரிவித்ததாக ஃபஹ்மி கூறினார்.
இங்குள்ள SMART தலைமையகத்தில் நடைபெற்ற MySiren சோதனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் சோதனைச் செய்தியை அனுப்ப ‘உறுதிப்படுத்து’ (confirm) பொத்தானை அழுத்தியதும், நாடு முழுவதும் உள்ள மக்கள் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் அந்த எச்சரிக்கையைப் பெற்றனர்” என்று தெரிவித்தார். பேரிடர்கள் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்று குறிப்பிட்ட அவர், இந்த உரத்த எச்சரிக்கை ஒலியானது, இரவு நேரங்களிலும் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக விளக்கினார். MySiren சோதனை எச்சரிக்கைகள் மலாய் மற்றும் ஆங்கில மொழிகளில் அனுப்பப்பட்டதாகக் கூறிய ஃபஹ்மி, தேவைப்பட்டால் பிற மொழிகளிலும் எச்சரிக்கைகளை அனுப்பும் வசதி இந்த அமைப்பில் உள்ளதாகத் தெரிவித்தார்.




















