MRT கட்டுமானத் திட்ட ஊழல் தொடர்பில் ஐவர் கைது!

புத்ராஜெயா, மார்ச் 22 :

MRT கட்டுமானத் திட்டத்தில் RM650 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள ஊழல் மோசடி நடந்தது தொடர்பில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) ஐந்து பேரை கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒரு டத்தோ உட்பட இரண்டு முன்னாள் இயக்குநர்கள் மற்றும் ஒரு பொறியியல் நிறுவனத்தின் மூன்று இயக்குநர்கள் ஆகியோர் அடங்குவர்.

43 முதல் 52 வயதுடையவர்களில் ஒரு பெண் உட்பட மூவரை இன்று முதல் மார்ச் 27 வரை ஆறு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.

எவ்வாறாயினும், நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்களான 54 மற்றும் 63 வயதுடைய இருவரும் உடல்நலக் காரணங்களுக்காக விளக்கமறியலில் வைக்கப்படவில்லை, ஆனால் ஒவ்வொரு நாளும் அவர்கள் MACC அலுவலகத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது.

அனைத்து சந்தேக நபர்களும் MACC சட்டம் 2009 இன் பிரிவு 16 இன் படி விசாரிக்கப்படுகிறார்கள்.

2017 ஆம் ஆண்டு MRT திட்டத்திற்கு நிறுவனத்தை ஆலோசகராக நியமிப்பதற்காக, இரண்டு முன்னாள் இயக்குநர்களும் மற்றொரு பொறியியல் நிறுவனத்திடம் இருந்து RM27 மில்லியன் லஞ்சம் பெற்றதாக நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here