அழைப்பு மையமாக செயல்படும் ஒரு நிறுவனம் மூலம், நாள் ஒன்றுக்கு 50 WeChat சுயவிபரங்கள் உருவாக்கிய மோசடிக் கும்பலின் ஊழியர்கள் 7 பேர் கைது!

கோலாலம்பூர், மார்ச் 23 :

நாள் ஒன்றுக்கு 50 WeChat சுயவிபரங்கள் உருவாக்கிய, ஒரு மோசடிக் கும்பலின் ஊழியர்கள் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அழைப்பு மையமாக செயல்படும் ஒரு நிறுவனம் மூலம், தந்திரமாக பெறப்படும் தரவுகளின் அடிப்படையில், ஒவ்வொரு நாளும் 50க்கும் மேற்பட்ட WeChat சுயவிபரங்கள் அதன் ஒவ்வொரு ஊழியர்களாலும் உருவாக்கப்படுகின்றன.

பின்னர், பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் தொடர்பின் தரவுகளும் வாட்ஸ்அப் குழுவிற்கு அனுப்பப்படும், அங்கு இந்த கும்பலின் தலைவர் மோசடி செயல்முறையை மேற்கொள்வார் என்று பிரிக்ஃபீல்ட்ஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் அமிஹிசாம் அப்துல் ஷுகோர் தெரிவித்தார்.

வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, பிரிக்ஃபீல்ட்ஸ் மாவட்ட காவல் தலைமையகம் (IPD) சமூக ஊடக ஆய்வகம், சைபர் மற்றும் மல்டிமீடியா குற்றப் புலனாய்வுப் பிரிவு (JSM) ஆகியோரின் உதவியுடன் இந்த மோசடிக் கும்பலின் செயல்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

கடந்த திங்கட்கிழமை, புக்கிட் அமான் காவல்துறையினரால் இங்குள்ள மோன்ட் கியாராவில் அமைந்துள்ள ஒரு சொகுசுமாடிக் குடியிருப்பின் ஒரு பிரிவில் சோதனை நடத்தப்பட்டது.

அதன் அடிப்படையில், கைது செய்யப்பட்டவர்களில் 19 முதல் 25 வயதுக்குட்பட்ட 2 உள்ளூர் ஆண்கள், 3 சீன ஆண்கள் மற்றும் 2 சீன பெண்கள் ஆகியோர் அடங்குவர்.

“மேலும் ஏழு யூனிட் மடிக்கணினிகள், பல்வேறு பிராண்டுகளின் 28 மொபைல் போன்கள், ஏழு விசைப்பலகைகள், ஏழு மவுஸ் மற்றும் செயல்பாட்டில் பயன்படுத்தப்பட்ட வீட்டுச் சாவிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.”

“நிபுணர் மதிப்பாய்வின் முடிவுகளின் அடிப்படையில், WeChat மூலம் ஆன்லைன் மோசடி செய்ததற்கான சாத்தியக்ககூறுகள் உள்ளன,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சீனாவில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை குறிவைத்து, இந்த மோசடி நடந்ததாக நம்பப்படுவதாக அமிஹிசாம் கூறினார்.

“சந்தேக நபர்கள் அனைவரும் வெவ்வேறு WeChat சுயவிபரங்களை மோசடி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தினர், அங்கு ஒரு நாளைக்கு உருவாக்கப்படும் மொத்த WeChat சுயவிவரங்களின் எண்ணிக்கை ஒரு நபருக்கு 50 சுயவிவரங்களுக்கு மேல் இருந்தது.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மோசடிக் கும்பலின் ஊழியர்கள், அவர்கள் மாதத்திற்கு RM2,000 முதல் RM3,000 வரை சம்பளம் பெற்றவர்கள் என்றும், இந்தக் குழு பிப்ரவரி 2022 முதல் வாடிக்கையாளர் சேவை அதிகாரிகளாகப் பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார்.

அனைத்து சந்தேக நபர்களும் குற்றவியல் சட்டத்தின் 420 வது பிரிவின் படி மேலதிக விசாரணைக்காக தடுத்து வைக்கப்படுவார்கள்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here