கிள்ளானில் ஆம்புலன்ஸை தடுத்த 2 பேர் கைது

ஷா ஆலமில் வியாழக்கிழமை ஒரு நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் ஆம்புலன்ஸை வேண்டுமென்றே தடுத்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

தெற்கு கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் (IPD) குற்றப் புலனாய்வுப் பிரிவின் (CID) குழுவினால் சந்தேக நபர்கள் இருவரும் நேற்று மாலை 4 மணியளவில்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

தென் கிள்ளான் மாவட்ட காவல்துறைத் தலைவர் சா ஹூங் ஃபோங்கின் கூற்றுப்படி, வெள்ளை நிற டொயோட்டா ஹைலக்ஸ் மற்றும் நீல நிற மொடெனாஸ் கிறிஸ் மோட்டார் சைக்கிள் மூலம் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டதைக் காட்டிய முகநூல் காணொளி பதிவை மதிப்பாய்வு செய்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டது.

ஆம்புலன்ஸ் டிரைவர் கிள்ளான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார். 53 மற்றும் 30 வயதுடைய இரு சந்தேக நபர்களின் சோதனையில், அவர்களிடம் கடந்தகால பதிவுகள் எதுவும் இல்லை எனக் காட்டியதாக சா கூறினார்.

கிள்ளான் நீதிமன்றத்தில் நாளை இரண்டு சந்தேக நபர்களையும் காவலில் வைக்க போலீசார் விண்ணப்பிப்பார்கள் என்று அவர் நேற்று இரவு ஒரு அறிக்கையில் கூறினார்.

வியாழன் அன்று நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் டிரைவரின் புகாரை மேற்கோள் காட்டி, டிரைவர் ஒரு டயாலிசிஸ் நோயாளியை கிள்ளானில் உள்ள ஸ்ரீ கோத்தா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார் என்று சா கூறினார்.

ஆம்புலன்ஸை விரட்டி வந்த கொண்டிருந்த டொயோட்டா ஹைஸ்க்ஸ் டிரைவரால் தான் நிறுத்தப்பட்டதாக புகார்தாரர் கூறினார்.

புகார்தாரர், வேன் ஓட்டுநரை ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து அவரை அங்கிருந்து நகரச் சொன்னார். சிறிது நேரத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸுக்கு இடையூறாக தனது வாகனத்தை நிறுத்தியது.

அந்த நபர் தனது மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி டிரைவரின் பக்கவாட்டு கதவை நெருங்கி டிரைவரை வெளியேறும்படி கட்டளையிட்டார். இருப்பினும், புகார் அளித்தவர் மோதலைத் தவிர்க்க தனது ஆம்புலன்ஸைத் திருப்பிச் சென்றார்.

பொது சாலையில் அவசரமாக அல்லது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதற்காக குற்றவியல் சட்டத்தின் 279ஆவது பிரிவின் கீழும், அதே சட்டத்தின் 341ஆவது பிரிவின் கீழும் தவறான இடையூறுக்காக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here