கிளாந்தானில் RM33 மில்லியன் தண்ணீர் கட்டணம் நிலுவையில் உள்ளது!

கோத்தா பாரு, மார்ச் 31 :

இந்த ஆண்டு பிப்ரவரி வரை, குடியிருப்பாளர்கள் பணம் செலுத்தத் தவறியதால் ஆயர் கிளாந்தான் எஸ்டிஎன் பிஎச்டி (AKSB) நீர் கட்டண பில்களின் நிலுவைத் தொகையில் மொத்தம் RM33 மில்லியன் இதுவரை பாக்கியாக உள்ளது.

கிளாந்தான் தொழில், உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் பயன்பாட்டுக் குழுவின் தலைவர் டத்தோ அசாமி முகமட் நோர் கூறுகையில், கிளாந்தானில் உள்ள மொத்த AKSB பயனீட்டாளர்களின் எண்ணிக்கை 271,876 பேராக உள்ளதுடன் கடந்த பிப்ரவரி வரையிலான மொத்த நிலுவைத் தொகை RM33 மில்லியனாக இருக்கிறது, இது மிக அதிக நிலுவைத் தொகையாக உள்ளது என்றார்.

“எனவே, மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் இதை கவனத்தில் எடுத்து, தண்ணீர் கட்டணத்தை செலுத்தும்படி மக்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.

கிளாந்தான் மாநில சட்டமன்ற மாநாட்டின் இன்றைய அமர்வின்போது, ரோஹானி இப்ராஹிம் (Pas-Tanjong Mas) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here