காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த மலேசியர் ஆஸ்திரேலியாவில் சடலமாக மீட்கப்பட்டார்

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 4 :

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள பாதர்ஸ்ட் அருகே ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 3) மலேசியர் ஒருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

கில்லோங்புத்தாவில் (Killongbutta) உள்ள ஒரு கிராமப்புற பகுதியில் புலனாய்வாளர்கள் தேடுதலைத் தொடங்கிய பின்னர், பிற்பகல் 3.30 மணியளவில் “ஜாக்கி” சோங் கை வோங்கின் உடல் என்று நம்பப்படுகிறது.

சோங் டிசம்பர் 25, 2020 மற்றும் ஜனவரி 8, 2021 க்கு இடையில் இறந்ததாகவும் அவரது  உடல் தடயவியல் பரிசோதனை மற்றும் அதன் அடையாளத்தை உறுதிப்படுத்த டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்தப்படும் என்று அதிகாரிகள் கூறியதாக ஆஸ்திரேலியாவின் நியூஸ் 9 தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டில், போதைப்பொருள் கடத்தல் கும்பலின் வழக்கை விசாரித்த காவல்துறைக்குழு, 24 வயதான மலேசியர் காணாமல் போனதைக் கண்டறிந்தது.

சோங்கின் மரணம் தொடர்பாக 33, 22 மற்றும் 28 வயதுடைய மூன்று ஆண்கள் மார்ச் மாத இறுதியில் குற்றம் சாட்டப்பட்டதாக தி ஆஸ்திரேலியன் செய்தி வெளியிட்டுள்ளது நினைவுகூறத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here