பொந்தியான், ஏப்ரல் 7 :
இங்குள்ள ஜாலான் அல்சகோஃப் என்ற இடத்தில் நேற்று ரமலான் புனித நோன்பின் நான்காவது நாளில், கடைகள் தீப்பிடித்ததில் எட்டு வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனர்.
பொந்தியான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர், துணை தீயணைப்பு கண்காணிப்பாளர் அசார் அப்துல் ஜாலீல் கூறுகையில், மாலை 4.47 மணிக்கு இந்த சம்பவம் குறித்து அவரது துறைக்கு அவசர அழைப்பு வந்தது.
40 ஆண்டுகளுக்கும் மேலான இயங்கி வரும் எட்டு கடைவீடுகளில் தீ விபத்து ஏற்பட்டதாக அவர் கூறினார்.
அவர் கூறியபடி, பொந்தியான், பொந்தியான் பாரு மற்றும் பெக்கான் நானாஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த 24 உறுப்பினர்கள், மூன்று FRT இயந்திரங்கள் மற்றும் ஒரு டேங்கர் டிரக் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
“மரம் மற்றும் கல்லால் கட்டிடம் கட்டப்பட்டதால் தீ வேகமாக பரவியது.
இருப்பினும், தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ள நிலையில், அதிஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை,” என்று அவர் கூறினார்.