குப்பைத் தொட்டியில் இறந்து கிடந்த 4 மாத குழந்தை; தம்பதியினர் கைது

பண்டார் பாரு கிள்ளான் பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தின் நேற்று மாலை குப்பைத்தொட்டியில் நான்கு மாத குழந்தை இறந்து கிடந்தது. கிள்ளான் உத்தாரா காவல்துறைத் தலைவர் விஜய ராவ் சமச்சுலு கூறுகையில், தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் பணியாளர்கள் மேற்கொண்ட முதற்கட்ட சோதனையில் குழந்தை 24 மணி நேரத்திற்குள் இறந்துவிட்டதாகக் கண்டறியப்பட்டது.

விஜய ராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், முக்கிய சந்தேக நபராக கருதப்படும் வெளிநாட்டுப் பெண்ணையும், அவரது காதலனாக இருந்த உள்ளூர் ஆண் ஒருவரையும் போலீசார் கைது செய்தனர்.

30 மற்றும் 40 வயதுடைய இருவர், குழந்தை கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அருகில் கைது செய்யப்பட்டனர். குழந்தையின் உடலை ரகசியமாக அப்புறப்படுத்தியதன் மூலம் பிறப்பை மறைத்ததற்காக குற்றவியல் சட்டம் பிரிவு 318 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது. சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here