நாட்டின் பத்து மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு- மலேசிய வானிலை ஆய்வு மையம்

ஷா ஆலாம், ஏப்ரல் 8:

நாட்டிலுள்ள 10 மாநிலங்களில், இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று,
மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரித்துள்ளது.

பெர்லிஸ், கெடா, பேராக், பகாங், சிலாங்கூர், கிளாந்தான், நெகிரி செம்பிலான், ஜோகூர், சரவாக் மற்றும் சபா ஆகிய மாநிலங்கள் என்று பிற்பகல் 4.30 மணிக்கு வெளியிடப்பட்ட ஒருஅறிக்கையில் அது தெரிவித்துள்ளது.

கெடாவின் லங்காவி, குபாங் பாசு, கோத்தா ஸ்டார், போக்கோக் சேனா, பத்தாங் டெராப், பெந்தோங், சிக், பாலிங் மற்றும் கூலிம் ஆகிய பகுதிகளும் இக்கனமழைக்கு உட்படும் என்றது.

இதற்கிடையில், பேராக்கில், லாரூட், மாடாங் டான் செலாமா, உலு பேராக், கோலக் கங்சார், கிந்தா, பேராக் தெங்கா, கம்பார், ஹிலிர் பேராக், பத்தாங் பாடாங் மற்றும் முஅல்லிம் ஆகிய பகுதிகளும் அடங்கும்.

அதுமட்டுமின்றி, கிளாந்தான் கோலக்கிராய் மற்றும் குவா மூசாங்கை உள்ளடக்கியதுடன் சிலாங்கூர், உலு சிலாங்கூர் மற்றும் உலு லங்காட்டில் என்பனவும் அடங்கும்.

மேலும் நெகிரி செம்பிலானின் ஜெலேபு, சிரம்பான், கோலாப் பிலா, ஜெம்போல் மற்றும் தம்பின் மற்றும் ஜோகூர் சிகாமாட், குளுவாங், மெர்சிங், கூலாய், கோத்தா திங்கி மற்றும் ஜோகூர் பாரு ஆகிவையும் இம்மழையை எதிர்நோக்கியுள்ளது.

அத்தோடு சரவாக்கில் சமரஹான் (சிமுஞ்சன்), ஸ்ரீ அமான், பெத்தாங், சரிகேய், பிந்துலு மற்றும் மிரி (சுபிஸ் மற்றும் மிரி) மற்றும் மேற்குக் கடற்கரையில் உள்ள சபா (பாப்பர், புட்டாடன், பெனாம்பாங் மற்றும் கோத்தா கினாபாலு), தவாவ் ( லஹாட் டத்து) , சண்டகன் (கினபடங்கான், பெலூரன் மற்றும் சண்டகான்) மற்றும் குடாட் (குடாட்) ஆகியனவும் அடங்கும்.

இவற்றைவிட பெர்லிஸ் மற்றும் பகாங்கின் அனைத்து பகுதிகளையும் இக்கனமழை உள்ளடக்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here