இரண்டு மாடிகள் கொண்ட ஒரு நீண்ட வீடு தீயில் எரிந்து நாசம்; பேத்தோங்கில் சம்பவம்

பேத்தோங், ஏப்ரல் 12 :

இங்குள்ள பேத்தோங்கில் காலை 10.19 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில், நிரந்தரமற்ற வகையிலான இரண்டு மாடிகள் கொண்ட ஒரு நீண்ட வீடு எரிந்து நாசமானது.

இந்த சம்பவத்தில் 11 கதவுகள் கொண்ட Rumah Agus Ban என அழைக்கப்படும் வீடே 100 விழுக்காடு எரிந்து சாம்பலானதாக தீயணைப்பு நடவடிக்கைகளின் உதவி கண்காணிப்பாளர் வின்சென்ட் பேலிங் யாபி தெரிவித்தார்.

எனினும், வீட்டில் இருந்த அனைவரும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வெளியே சென்றதன் காரணமாக அவர்கள் உயிர் பிழைத்ததாக அவர் கூறினார்.

“காலை 10.20 மணிக்கு அவசர அழைப்பு வந்ததையடுத்து, பேத்தோங் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் குழு அந்த இடத்திற்கு விரைந்தது.

தற்போது, ​​தீ தொடர்ந்து எரிந்து வருவதால், அணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம்,” என்றார்.

இதுவரை காயங்களோ, விபத்துகளோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்றார்.

இதேவேளை, தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here