மின்சாரம் தாக்கி ஆடவர் மரணம்

கோத்தா கினாபாலு, ஏப்ரல் 12 :

கம்போங் நும்பாக், ஜாலான் யாயாசான் தெபாகு என்ற இடத்தில், இன்று நடந்த ஒரு சம்பவத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.

காலை 7 மணியளவில் நடந்த சம்பவத்தில், 37 வயதான ஆடவர் ஒருவர் இறந்துவிட்டதாக, சம்பவ இடத்தில் உதவிய மலேசிய சுகாதார அமைச்சகத்தின் (MOH) மருத்துவ அதிகாரியால் உறுதிப்படுத்தப்பட்டது.

சபா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் இதுபற்றிக் கூறுகையில் , தங்களுக்கு காலை 7.03 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகக் கூறினார்.

அவசர சேவைகள் உதவிப் பிரிவு (ERMS) வேனுடன் நான்கு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் “செயல்பாட்டுக் குழு பாதிக்கப்பட்டவரைத் தூக்கிச் செல்வதற்கு முன், சபா மின்சாரம் விநியோக நிறுவன உறுப்பினர்கள் (SESB) மின்சார விநியோகத்தைத் துண்டிப்பதற்காக சம்பவ இடத்தில் வருகைதந்து இருந்தனர்.

“பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே இறந்தது உறுதிப்படுத்தப்பட்டது, பின்னர் மேலதிக நடவடிக்கைகளுக்காக அவரது சடலம் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது,” என்று அவர் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here