பள்ளியில் இரசாயன கசிவை சுவாசித்த 61 மாணவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்

குபாங் பாசு, ஏப்ரல் 12 :

செக்கோலா மேனெங்கா அகமா (SMA) நூருல் இஸ்லாம், ஆயர் ஈத்தாம் என்ற பகுதியைச் சேர்ந்த மொத்தம் 61 மாணவர்கள், பள்ளியில் இருந்த காலாவதியான கந்தக அமிலம் என்று நம்பப்படும் இரசாயனத்தை சுவாசித்ததால், அவர்கள் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இன்று நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், 14 முதல் 17 வயதுக்குட்பட்ட ஒன்பது சிறுவர்கள் மற்றும் 52 சிறுமிகள் அடங்கிய அனைத்து மாணவர்களும் அந்தந்த வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்த போது, இரசாயன கசிவை சுவாசித்தனர் என்று குபாங் பாசு மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் ரோட்ஸி அபு ஹாசன் கூறினார்.

இரசாயனத்தை சுவாசித்ததைத் தொடர்ந்து, மாணவர்கள் தொண்டை வலி மற்றும் தலைவலி மற்றும் குமட்டல் போன்ற அறிகுறிகளை அனுபவித்தனர். அதனைத் தொடர்ந்து பள்ளி தீயணைப்புப் பிரிவைத் தொடர்புகொண்டு உதவி பெற்றதுடன், அறிகுறிகளைக் கொண்ட மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனையையும் தொடர்பு கொண்டதாக அவர் கூறினார்.

“பள்ளியின் அறிவியல் ஆய்வகத்தில் கற்றல் பயன்பாட்டிற்காக ஒரு பீப்பாய் சல்பூரிக் அமிலம் சேமித்து வைக்கப்பட்டது என்று விசாரணையில் கண்டறியப்பட்டது. இருப்பினும், நியமிக்கப்பட்ட ஒப்பந்ததாரரால் அவை தூக்கிச் செல்லப்பட்டபோது, அப்பீப்பாய் உடைந்து திரவம் வெளியேறியது என்று குபாங் பாசு மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் (IPD) இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

மேலும் “நிலைமை கட்டுக்குள் உள்ளது, மேலும் வெடிப்பு சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.

“இதுவரை மாணவர்கள் அவர்கள் அனைவரும் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர், மேலும் தீவிரமான வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், கெடா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் சயானி சைடன் தனது அறிக்கையில், இன்று நண்பகல் 12.20 மணியளவில் இந்த சம்பவம் தொடர்பாக தனது துறைக்கு அழைப்பு வந்தது.

“அறிக்கையைத் தொடர்ந்து, ஜித்ரா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் உறுப்பினர்கள் குழு இரசாயனக் கழிவுகளைக் கழுவுவதற்காக SMA நூருல் இஸ்லாம், ஆயர் ஈத்தாம் என்ற இடத்திற்கு வந்தது.

“இன்று பிற்பகல் 2.45 மணிக்கு அனைத்து மீட்பு நடவடிக்கையும் முடிவதற்கு முன்பு, அந்த இடத்தில் காற்றோட்டம் பாதுகாப்பாக இருப்பதை நாங்கள் உறுதி செய்தோம்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here