கிள்ளான், ஏப்ரல் 16 :
தெற்கு கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச்சாலையின் (SKVE) 38.6 ஆவது கிலோமீட்டரில், நேற்றிரவு பந்திங் நோக்கிச் செல்லும் சாலையில் இரண்டு கன்டெய்னர் லோரிகள் மோதிய விபத்தில் 36 வயது லோரி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.
சிலாங்கூர் தீயணைப்பு இயக்குநர், நோராஸாம் காமிஸ் கூறுகையில், விபத்து தொடர்பாக அழைப்பு வந்ததும், அண்டலாஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து அவரது குழு உடனடியாக அந்த இடத்திற்குச் சென்றது.
“இரண்டு கன்டெய்னர் லோரிகள் மோதிய விபத்து, இரவு 11.34 மணியளவில் நடந்தது என்பது விசாரணையில் கண்டறியப்பட்டது.
“முதல் லோரியிலிருந்து விழுந்த ஒரு கொள்கலன் சாலையைக் கடந்தபோது, எதிர் திசையில் இருந்து வந்த இரண்டாவது லோரி மீது மோதியதில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
“சம்பவத்தைத் தொடர்ந்து, இரண்டாவது கன்டெய்னர் லோரியின் ஓட்டுநர் உயிரிழந்தார்,” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.
பாதிக்கப்பட்டவரை அகற்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் எடுத்ததாக நோராஸாம் கூறினார்.
“பாதிக்கப்பட்ட உள்ளூர்வாசியின் சடலம் , காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக பந்திங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது
மேலும் இந்த விபத்தில் “முதல் கன்டெய்னர் லோரியின் 34 வயதான ஓட்டுநர் காயமடைந்தார்,” என்று அவர் கூறினார்.