வீடு திடீரென தீப்பிடித்ததில் தந்தையும் மகனும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஜெம்போல், ஏப்ரல் 17 :

இங்குள்ள ஃபெல்டா பாலோங் 7 இல் உள்ள ஒரு வீட்டில், இன்று ஏற்பட்ட தீ விபத்தில் தந்தையும் மகனும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர் என்று மூத்த துணை தீயணைப்புத் தலைவர், செயல்பாட்டுத் தளபதி, முகமட் ஹஸ்ரீன் முகமட் ஜஹார் தெரிவித்தார்.

இன்று காலை 10.31 மணியளவில், இந்த சம்பவம் குறித்து அவரது துறைக்கு அவசர அழைப்பு வந்ததாகவும் , உடனே ஸ்ரீ ஜெம்போல் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த 16 உறுப்பினர்களுடன் மொத்தம் மூன்று அதிகாரிகள் மற்றும் மூன்று துணை தீயணைப்பு வீரர்களுடன் அந்த இடத்திற்குச் சென்றனர் என்று ஜஹார் கூறினார்.

“இந்தச் சம்பவத்தில், அரை நிரந்தர ஃபெல்டா வீடு 90 விழுக்காடு எரிந்து சாம்பலானது. 10 நிமிடங்களில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, அரை மணி நேரத்துக்குப் பிறகு முழுமையாக அணைக்கப்பட்டது,” என்று இன்று தொடர்பு கொண்ட போது அவர் கூறினார்.

சம்பவத்தின் போது, ​​வீட்டில் இருந்த 64 வயது தந்தை மற்றும் அவரது 26 வயது மகன் ஆகியோர் இருந்ததாகவும், அவர்கள் இருவரும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வெளியே ஓடி வந்ததால், காயமின்றி உயிர்தப்பினார் என்றும் அவர் கூறினார்.

தீ விபத்துக்கான காரணம் மற்றும் மதிப்பிடப்பட்ட இழப்பு இன்னும் விசாரணையில் உள்ளது,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here