வணிக வளாகத்தில் பாதுகாவலரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட வெளிநாட்டவர் கைது

முகக்கவசம் அணியாததற்காக எச்சரிக்கப்பட்ட பின்னர், ஷாப்பிங் மால் பாதுகாவலரை திட்டியதற்காகவும் மோசமான சைகைகளை செய்ததற்காகவும் கடந்த வார இறுதியில் ஒரு வைரல் வீடியோவில் சிக்கிய வெளிநாட்டவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

44 வயதான கனேடியர் ஜாலான் அம்பாங் உள்ள வணிக வளாகத்தில் 18 வினாடிகள் கொண்ட வீடியோ  சமூக வலைதளங்களில் வைரலானது. வீடியோவை அறிந்து வாக்குமூலம் அளிப்பதற்காக நேற்று இரவு 8.30 மணியளவில் காவல் நிலையத்திற்குச் சென்ற பின்னர் கைது செய்யப்பட்டதாக வங்சா மஜு மாவட்ட காவல்துறைத் தலைவர் அஷாரி அபு சாமா தெரிவித்தார்.

கோலாலம்பூரில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் கனடியர், விசாரனை முடிய போலீசார் காத்திருக்கும் வேளையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது மற்றும் மேலதிக அறிவுறுத்தல்களுக்காக துணை அரசு வழக்கறிஞரிடம் அனுப்பப்பட்டது.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 269, சிறு குற்றச் சட்டம் 1955 இன் பிரிவு 14 மற்றும் தொற்று நோய்களைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் (பாதிக்கப்பட்ட உள்ளூர் பகுதிகளுக்குள் நடவடிக்கைகள்) விதிமுறைகளின் 18ஆவது விதியின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டதாக ஆஷாரி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here