RM25,000 க்கும் அதிகமான தொகையை தவறாக உரிமைகோரியதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் இருவர் கைது

சிரம்பான், ஏப்ரல் 20 :

RM25,000 க்கும் அதிகமான தொகையை தவறாக உரிமைகோரி கொடுப்பனவு கோரிக்கையைச் சமர்ப்பித்ததாக, ரேலா தன்னார்வத் தொண்டர் அமைப்பின் இரண்டு மேற்பார்வையாளர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) நேற்று கைது செய்துள்ளது.

38 மற்றும் 56 வயதுடைய அவ்விருவரும், நேற்று MACC சிரம்பான் அலுவலகத்திற்கு நண்பகல் 2 மணியளவில் சாட்சியமளிக்க வந்தபோது கைது செய்யப்பட்டனர்.

விசாரணைக்கு உதவுவதற்காக இருவரும் ஏப்ரல் 26ஆம் தேதி வரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு பேருக்கும் எதிரான தடுப்புக்காவல் விண்ணப்பம் இன்று சிரம்பான் சிறப்புப் போக்குவரத்து நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட் இன்டான் சியாபினாஸ் ரோஸ்லின் முன் எம்ஏசிசி ( MACC) இன் வழக்குத் தொடரும் அதிகாரி முகமட் கைரி அப்துல் கரீமினால் தாக்கல் செய்யப்பட்டது.

ஆதாரங்களின்படி, அந்த நேரத்தில் இருவரும் பணியில் இல்லாத நிலையில், பண்டார் பாரு என்ஸ்டெக், நீலாயில் உள்ள ஒரு கல்வி மையத்தில் பணி செய்ததாக, பொய்யான கணக்கை காட்டி உரிமை கோரியதாக கூறப்படுகிறது.

மேலும் 2021 மே முதல் நவம்பர் வரை இந்தக் குற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில், நெகிரி செம்பிலான் எம்ஏசிசி (MACC) இயக்குநர் அவாங்காக் அகமட் தௌபிக் புத்ரா அவாங் இஸ்மாயில் இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்ததை உறுதிப்படுத்தினார், மேலும் இந்த வழக்கு எம்ஏசிசி சட்டம் 2009 இன் பிரிவு 18 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here