வாகனம் மோதி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பாதசாரியான மூதாட்டி மரணம்

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 22 :

நேற்று இங்குள்ள பிரிவு 17/21 இல், சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தபோது வாகனம் மோதியதால் காயமடைந்த 89 வயது மூதாட்டி, மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் (யுஎம்எம்சி) சிகிச்சை பெற்று வந்தவேளையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைமை துணை ஆணையர் முகமட் ஃபக்ருடின் அப்துல் ஹமீத் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு காலை 10.59 மணிக்கு தகவல் கிடைத்தது.

“நேற்றுக்காலை 6.30 மணியளவில் விபத்து நடந்ததாக விசாரணையில் கண்டறியப்பட்டது. பலியானவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதாக நம்பப்படுகிறது.

இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாதசாரி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்திற்கான காரணம் மற்றும் மரணத்திற்கான காரணத்தை அடையாளம் காண போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.

எனவே, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது சம்பவ இடத்தில் இருந்தவர்கள் 014-2536820 என்ற எண்ணிலோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்திலோ போக்குவரத்து புலனாய்வு அதிகாரி இன்ஸ்பெக்டர் ஆர்.நாவலனைத் தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவ முன்வருமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here